This blog for publishing my passion that is writing . எனது எழுத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு இடம்..
Monday, April 21, 2008
கவிதை
மேக நங்கை
தாய்மை தவமிருந்து
ஈன்றெடுத்தாள்
மழையெனும் மகளை !!!
அவள் காதலில் கசிந்துருகி
வான் விட்டு இறங்கி வந்தாள்
பூமி கணவனை
கண்டு மகிழ…
(அற்புதா)
Sunday, April 20, 2008
வெண்மேகம் பெண்ணாக
அழகான பாடல் வரிகள்..உள்ளத்தை அள்ளும் குரல்..அருமை...
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப்பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்ஜம் திண்டாடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாலென்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தாலென்ன
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே (வெண்மேகம்)
மஞ்சள் வெயில் நீ
மின்னல் ஒளி நீ
உன்னைக் கண்டவரை கண்கலங்க நிற்க வைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபப்பட்டதென்னடி
தேவதை வாழ்வது வீடல்ல கோயில்
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா உன்னழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
எங்கள் மனதை கொள்ளையடிப்பாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழியசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கிச் செல்ல
கட்டளைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ (வெண்மேகம்)
Saturday, April 19, 2008
பிடித்த வரிகள்
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கணக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாது
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
உன் மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது
ஸ்ரீநிவாஷ்(did i spell it correctly?) குரலும், இசையும் அதன் வரிகளும் என்னை எப்பொழுதுமே மயக்கும்..
தலைவர் விஜயின் அருமையான கவிதை
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை (2x)
முடிந்த கதை தொடர்வதில்லை
இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே (நினைப்பதெல்லாம்)
ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது (2x)
ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதியில்லை (நினைப்)
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது (2x)
பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும் (நினைப்)
நீ இல்லாத உலகத்திலே
நீ இல்லாத உலகத்திலே
நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனை இல்லை (2x)
காயும் நிலா வானில் வந்தால்
கண் உறங்கவில்லை (2x)
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய்
பெண் உறங்கவில்லை (2x)
உன் முகத்தை பார்ப்பதற்கே
கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே
உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது (2x)
இந்த காவல் தாண்டி ஆவல் உன்னை
தேடி ஓடுது (2x)
பொன் விலங்கை வேண்டும் என்றே
பூட்டிக்கொண்டெனே
உன்னை புரிந்தும் கூட சிறையில்
வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை எண்ணுகிறேனே (2x)
நான் என்றும் உந்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே (நீ இல்லாத)