Tuesday, February 21, 2023

காலை நேர கானம்

புத்தம் புது காலை

பொன்னிற வேலை

 

ஜானகியம்மாவின் குரலில் அப்படி ஒரு தாலாட்டாய், எழுந்திருக்காதே இன்னும் கொஞ்சம் தூங்கு ராஜாத்தி என நம்மை தூண்டிவிடும் பாடல் இது!!

பூ.........வில் தோன்றும் வாசம் அப்படினு இழுக்கறப்போ நாமக்கு பூ வாசம் வீசற போலவே ஃபீலாகும்!!! 

ஹஹாஹாஹா நு நடுவுல இழுப்பாங்க பாரு!! அட அட!!  

கடைசில வர அந்த லாலாலா ல நாம அப்படியே மயங்கி கிறங்கி நின்னுடுவோம்!! ராஜாவின் ராஜ்ஜியத்தில் மற்றுமொரு நல்முத்து இது!

லவ் ஜானகி அம்மா!!







 

Tuesday, January 1, 2019

மருதாணி வைத்த கை





தாடி வைத்த பையா
மருதாணி வைத்த கையா
கழுத்தில் என்ன டையா
சொல்வேனே ல்தகாசைஆ

Thursday, March 15, 2018

நான் பாடும் மௌனராகம்


Image result for நான் பாடும் மௌன ராகம்

இந்தப் பாட்ட நான் இதோட ஐம்பது தடவ கேட்டுட்டேன். ஏன்????

தெரியலை.. சோகமா இருக்கறப்ப சோக பாடலை கேட்கக் கூடாது சொல்லுவாங்க. அது இன்னும் டிப்ரஷன குடுக்குமாம். ஆனா இந்தப் பாட்டு கேட்கும் போது எனக்கு ஒரு பீஸ்புல்னஸ். வாவ் பீலீங். சின்ன வயசுல இருந்து கேட்ட பாட்டுத்தான், ஆனா இப்போ இன்னும் மனசுக்கு நெருங்கிருச்சி. அதுவும் இந்த வரி...

கண்கள் என்னும் சோலையில்
காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு தான் 

சாபம் என்று கண்டேன்



முழு பாடல் வரிகளும் கீழே குடுத்துருக்கேன்.  ராஜானா ராஜாதான் :)




நான் பாடும் மௌன ராகம்…. என் காதல் ராணி இன்னும்…..

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

வைகாசி நிலா


Image result for beautiful lady




சாக்லேட் தடவிய
எக்லேர்(éclair) இவளோ
தேன் விரவிய
ப்ரெட்ஷல்(pretzel) நிலவோ
பால் ஊற்றிய
ஸ்ட்ருடல்(strudel) இதழோ
சுவைத்து நான் அறிய
என்றுதான் விடிவோ?

Wednesday, March 7, 2018

International Woman's Day



தினமும் நமக்கு பெண்கள் தினம் தான். ஆனாலும் எதற்காக இப்படி தனியாக ஒரு நாள்? யோசிச்சுப் பார்த்தேன். இது தான் பட்டுனு தோணுச்சு.

பெண்ணான நாம் தினமும் ஆண் போல வேலைகளைப் பார்க்கிறோம். அதனால பாடி கண்டிஷன் ரொம்ப வீக்காயிருச்சு. இன்னிக்கு பெண்கள் தினம்னு ஒன்னு கொண்டாடினாலாவது, அட நாம பொண்ணாச்சேன்னு ஞாபகம் வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்னுதான் இந்த தினம்.

இன்னிக்கும் ரெஸ்ட் கிடைக்காதவங்க, மே 1 க்கு வேய்ட் பண்ணுங்க. தொழிலாளர் தினமாச்சும் உங்களுக்கு நல்லதா விடியட்டும்..

அனைவருக்கும் எனது இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்.  

கனவாய் நனவாய் -- கவிதை






நனவிலே நீ வந்தாய்
கனவென நான் இருந்தேன்
காதலை நீ தந்தாய்
கானலென நினைத்திருந்தேன்
ராகமாய் நீ இருந்தாய்
செவிக் கதவை அடைத்திருந்தேன்
உயிரன்பு நீ தந்தாய்
உணராமல் மரித்திருந்தேன்
வருவாய் எனை உணர்வாய்
தேவாமிர்தம் தருவாய்
நனவிலும் உன் கனவை தேடும்
இவள் தேவனின் தேன்மலர்…..