முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்று விட்டாள் (முழுமதி)
கால் தடமே பதியாத கடல் தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதிலே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவளிருக்க மறுகரையாக நானிருக்க
இடையில் தனிமை தழும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க
கைகள் நினைத்தால் நடந்திடுமா
நிகழ்காலம் நடுவில் வேடிக்கை பார்க்கிறதே (ஓஓ முழுமதி)
அமைதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலை கோத
மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்
தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய் மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா (ஓ ஓ முழுமதி)
This blog for publishing my passion that is writing . எனது எழுத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு இடம்..
Monday, May 12, 2008
Jodhaa Akbar (முழுமதி )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment