அழகான வரிகள்,அருமையான இசை, அற்புத குரல்...
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா (2x)
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம் (2x)
வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷையின்றி
ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள் (செந்தாழம் )
அழகு மிகுந்த ராஜகுமாரி
மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி (செந்தாழம்)
இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொற்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று
வானுலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி (செந்தாழம்)
This blog for publishing my passion that is writing . எனது எழுத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு இடம்..
Saturday, May 17, 2008
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் - முள்ளும் ம
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment