மழலையின் மொழியினில்
அழகிய தமிழ் படித்தேன் நான்
குழலிசை யாழிசை இணைந்தொரு இசை படித்தேன்
விழி பார்வை முழுதும்
ஒளி வீசும் எழிலே
உனை பாடும் வரமே அது போதும் தினமே(மழலை)
தோளில் ஆடும் பிள்ளை
இனி இதை விட சுகம் எதும் இல்லை
உள்ளம் பூத்த முல்லை
இந்த உறவுக்கு தடைகளும் இல்லை
காணாத பாசம் நீ தந்த நேசம்
கரையாதது என்றும் பிரியாதது
அன்பில் வாழும் பூஞ்சிட்டு
அன்னை பாடும் தாலாட்டு
இன்றும் என்றும் கேட்காதோ
இன்பம் தன்னை சேர்க்காதோ
இணைந்தொரு பாலம் உறவுக்கு போட்டது நீதான்(மழலை)
பட்டம் வாங்க வேண்டும்
பல பதவிகள் நீ பெற வேண்டும்
பாரில் உன்னை பார்த்து
தினம் பலர் உந்தன் வழி வர வேண்டும்
துணிவோடு உள்ளம் கனிவோடு என்றும்
நீ வாழ்கவே இன்பம் உனக்காகவே
சட்டம் உன்னை காப்பாற்றும் ஊரும் உன்னை பாராட்டும்
பாரதி கண்ட புதுமை பெண் நீயென
என்றும் ஊர் போற்றும்
அதை தினம் பார்த்து மனம் இங்கு ஆறிடும் கண்ணே (மழலை)
This blog for publishing my passion that is writing . எனது எழுத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு இடம்..
Tuesday, May 20, 2008
மழலையின் மொழியினில் (பிள்ளைக்காக)
கண்ணே நவமணியே
உன்னை காணாமல் கண் உறங்குமோ (கண்ணே)
ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும்
வாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும் (கண்ணே)
தவமிருந்து பெற்ற கிளி தவிக்கவிட்டு போனது போல்
துணையாக வந்த கிளி தனியாக போய்விடுமோ
ஆடத ஊஞ்சல்களை ஆடவைத்த வண்ண மயில்
பாடத சொந்தங்களை பாட வைத்த சின்ன குயில்
என்னை விட்டு தன்னந்தனி வாழ்ந்திடுமோ வழ்ந்திடுமோ
என்னுயிரும் என்னை விட்டு போய் விடுமோ போய் விடுமோ (கண்ணே)
தவமா தவமிருந்து துணையாக வந்த கிளி
தவியா தவிக்கவிட்டு தனியாக சென்றதென்ன
ஊராரின் கண்ணு பட ஊர்கோலம் போனதம்மா
யாரோட கண்ணுபட்டு ஆத்தோடு போனதம்மா
கையிலதான் வச்சிருந்தா தவறி அது போகுமின்னு
மடியில நான் வைச்சிருந்தேன் மடியுமின்னு நெனக்கலியே (கண்ணே)
Saturday, May 17, 2008
பொம்மக்குட்டி அம்மாவுக்கு
நான் சோகமாக இருக்கும் போதெல்லாம் விரும்பி பார்க்கும் படம் (காவியம்)
பொம்மக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ
தங்ககட்டி பாப்பாவுக்கு தாலெலோ (2x)
வாராமல் வந்த செல்வம்
வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த தாளம் பூச்சரம் (பொம்ம )
ரெண்டு தாய்கொரு பிள்ளை
என்று வாழ்ந்திடும் முள்ளை
உன்னை யார் சுமந்தாரோ
உண்மை நீயறிவாயோ (2x)
உன்னை நினைத்து உருகிடும் மாது
உன்னை பிரிய மனம் துணியாது
பூவே பனி பூவே நீதான் இல்லாது
பார்வை எங்கள் பார்வை தூக்கம் கொள்ளாது
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ (பொம்மு)
பெற்ற தாய் படும் பாடு பிள்ளை தான் அறியாது
இது காக்கையின் கூடு இங்கே பூங்குயில் பேடு (2x)
வந்த உறவை இவள் விடுவாளோ
சொந்த உறவை அவள் தருவாளோ
பாசம் உயிர் நேசம் வாழும் நெஞ்சோடு
படும் உறவாடும் ஜீவன் உன்னோடு
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ (பொம்மு)
அழகிய கண்ணே
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேயல்ல தாய் நீ
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயும் அல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளை நிலா (அழகிய)
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே (2x)
என் நெஞ்சம் என்றும் கண்ணாடிதான்
என் தெய்வம் மாங்கல்யம்தான் (அழகிய)
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது (2x)
நம் வீட்டில் என்றும் அலை மோதுது
என் நெஞ்சம் அலையாதது (அழகிய)
மாலை பொழுதின்
P.சுசிலா is the best...
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி (2x)
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி (மாலை)
இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி காண்பது ஏன் தோழி (மாலை)
மண்முடித்தவர் போல் அருகினிலே ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில்
குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி பறந்து விட்டார் தோழி (மாலை)
கனவில் வந்தவர் யாரென கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அடையாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர் காலம் மயங்குது எதிர் காலம் (மாலை)
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் - முள்ளும் ம
அழகான வரிகள்,அருமையான இசை, அற்புத குரல்...
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா (2x)
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம் (2x)
வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷையின்றி
ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள் (செந்தாழம் )
அழகு மிகுந்த ராஜகுமாரி
மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி (செந்தாழம்)
இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொற்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று
வானுலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி (செந்தாழம்)
Monday, May 12, 2008
Jodhaa Akbar (முழுமதி )
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்று விட்டாள் (முழுமதி)
கால் தடமே பதியாத கடல் தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதிலே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவளிருக்க மறுகரையாக நானிருக்க
இடையில் தனிமை தழும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க
கைகள் நினைத்தால் நடந்திடுமா
நிகழ்காலம் நடுவில் வேடிக்கை பார்க்கிறதே (ஓஓ முழுமதி)
அமைதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலை கோத
மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்
தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய் மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா (ஓ ஓ முழுமதி)