









This blog for publishing my passion that is writing . எனது எழுத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு இடம்..










படம் : வட்டத்துக்குள் சதுரம்
இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே
ஒரே ராகம்
கொடி நீ மலர் நான்
கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம்
துணை நீ (இதோ)
ஓடுது ரயில் பாரு மனம் போலவே
பாடுது குயில் அங்கு தினம் போலவே
மாமரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பறந்தோடுது
பார்ப்பது எல்லாம் பரவசமாக
புதுமைகள் காண்போம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீ தான் என் சொந்தமே(இதோ)
தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒளியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருயாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிக்கொரு கிளை போல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே (இதோ)
ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தொழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொல்லும் வழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே (இதோ)
ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அனுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே (இதோ)
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா(பூ)
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே (பூ)
பூங்காற்றிலே சிறு பூங்கொடிபோல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே என்னை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே (பூ)
அம்மாவென்று வரும் கன்று குட்டி
அது தாய்மையை கொண்டாடுது
குக்கூவென்று வரும் சின்ன குயில்
தன் குழந்தைக்கு சோறுட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீ இன்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே (பூ)
மழலையின் மொழியினில்
அழகிய தமிழ் படித்தேன் நான்
குழலிசை யாழிசை இணைந்தொரு இசை படித்தேன்
விழி பார்வை முழுதும்
ஒளி வீசும் எழிலே
உனை பாடும் வரமே அது போதும் தினமே(மழலை)
தோளில் ஆடும் பிள்ளை
இனி இதை விட சுகம் எதும் இல்லை
உள்ளம் பூத்த முல்லை
இந்த உறவுக்கு தடைகளும் இல்லை
காணாத பாசம் நீ தந்த நேசம்
கரையாதது என்றும் பிரியாதது
அன்பில் வாழும் பூஞ்சிட்டு
அன்னை பாடும் தாலாட்டு
இன்றும் என்றும் கேட்காதோ
இன்பம் தன்னை சேர்க்காதோ
இணைந்தொரு பாலம் உறவுக்கு போட்டது நீதான்(மழலை)
பட்டம் வாங்க வேண்டும்
பல பதவிகள் நீ பெற வேண்டும்
பாரில் உன்னை பார்த்து
தினம் பலர் உந்தன் வழி வர வேண்டும்
துணிவோடு உள்ளம் கனிவோடு என்றும்
நீ வாழ்கவே இன்பம் உனக்காகவே
சட்டம் உன்னை காப்பாற்றும் ஊரும் உன்னை பாராட்டும்
பாரதி கண்ட புதுமை பெண் நீயென
என்றும் ஊர் போற்றும்
அதை தினம் பார்த்து மனம் இங்கு ஆறிடும் கண்ணே (மழலை)
நான் சோகமாக இருக்கும் போதெல்லாம் விரும்பி பார்க்கும் படம் (காவியம்)
பொம்மக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ
தங்ககட்டி பாப்பாவுக்கு தாலெலோ (2x)
வாராமல் வந்த செல்வம்
வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த தாளம் பூச்சரம் (பொம்ம )
ரெண்டு தாய்கொரு பிள்ளை
என்று வாழ்ந்திடும் முள்ளை
உன்னை யார் சுமந்தாரோ
உண்மை நீயறிவாயோ (2x)
உன்னை நினைத்து உருகிடும் மாது
உன்னை பிரிய மனம் துணியாது
பூவே பனி பூவே நீதான் இல்லாது
பார்வை எங்கள் பார்வை தூக்கம் கொள்ளாது
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ (பொம்மு)
பெற்ற தாய் படும் பாடு பிள்ளை தான் அறியாது
இது காக்கையின் கூடு இங்கே பூங்குயில் பேடு (2x)
வந்த உறவை இவள் விடுவாளோ
சொந்த உறவை அவள் தருவாளோ
பாசம் உயிர் நேசம் வாழும் நெஞ்சோடு
படும் உறவாடும் ஜீவன் உன்னோடு
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ (பொம்மு)