Thursday, December 4, 2008

ஓ சாந்தி சாந்தி (vaaranam ayiram)

நீயின்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடு வானம் சிவந்து போகும்
தொலை தூரம் தொலைந்து போகும்
கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே
இனி உன்னை பிரிய மாட்டேன்
துளி தூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்க தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் இமை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
ஓ………………….

நீயின்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உனை காணும் நேரம் வருமா..வருமா
என் கண்கள் மோட்சம் பெறுமா

விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
தினம் நானும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
எனை வந்து உரசும் காற்றே
அலையோடு கரைந்து நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் இமை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் இமை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
லாயி லாயி லாயி

Saturday, November 8, 2008

Ippave Ippave

இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே
கண்ணை மூடி உன்னைக் கண்ட
அப்பவே அப்பவே
கை வளையல் ஓசை கேட்ட
அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட
அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன்
அப்பவே அப்பவே (இப்பவே)


வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக்கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது
முள்ளை காலில் ஏற்றி கொண்டால் ரத்தம் மட்டும்தான்
உன்னை நெஞ்சில் ஏற்றி கொண்டேன் நித்தம் யுத்தம் தான்
சொல்லி தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட
மின்னல் கண்ட பாலை போல உன்னால் நானும் பூத்தாட
உன்னை கண்டேன் என்னை காணோம்
என்னை காண உன்னை நானும் (இப்பவே)

எந்தன் வாழ்வில் வந்ததிங்கு நல்ல திருப்பம்
இனி உந்தன் கையை பற்றி கொண்டே செல்ல விருப்பம்
நெஞ்சனையில் என்றும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்
உன்னை காண நானும் வந்தால்
சாலை எல்லாம் பூஞ்சோலை
உன்னை நீங்கி போகும் நேரம்
சோலை கூட தார் பாலை
மண்ணுக்குள்ளே வேரை போல
நேஞ்சுக்குள்ளே நீ தான் நீ தான் (இப்பவே)

Monday, July 21, 2008

Ennullae Ennullae - Valli

Beautiful song by Ilayaraaja and Swarnalatha..

Wednesday, July 16, 2008

Kannadasa from Thavam...

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா(2x)
என் விழியோரமாய் மை எடுப்பாயடா
என் இடைமீதிலே கவி வடிப்பாயடா
என்னை மெச்சி மெச்சி லட்சம் லட்சம்
பாட்டு மீண்டும் பாடு (கண்)

நீ இல்லாமலே நான் உன்னை காதலிக்கிறேன்
இதை சொல்லாமலே நான் உன்னை காதலிக்கிறேன்
அதிகாலை எழுந்து கோலம் போட்டு கொண்டேன்
அழகாக உடுத்தி பொட்டு வைத்து கொண்டேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
மனிதர்கள் உறங்கும் நேரத்தில்
தேவதையாய் திரிந்தே நான் உன்னை காதலிக்கிறேன்
உன்னை காதலிக்கிறேன் (கண்)

நீ அழைப்பாயென நான் இங்கு காத்திருக்கிறேன்
எனை மணப்பாயென நான் இங்கு காத்திருக்கிறேன்
மனதாலே உனக்கு மாலை மாற்றி கொண்டேன்
கனவாலே உனக்கு மனைவியாகி கொண்டே
நான் இங்கு காத்திருக்கிறேன்
காலங்களை மறந்து அசையாத
சிலையாக அமர்ந்தே நான் இங்கு காத்திருக்கிறேன்
இங்கு காத்திருக்கிறேன் (கண்)

Thursday, June 19, 2008

Salute To Ulaga Nayagan..
















Come Dance With Me Before You Go..(4x)



உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு..(2x)
உலக நாயகனே உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐ நாவும் உன்னை அழைக்கும் (உலக)


நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன் (2x)
ஓருயிர் கொண்டு உலகத்தில் இன்று
ஆயிரம் பிறவி கொண்டாய்
உன் வாழ்வில் ஆயிரம் பிறைகள் கண்டாய்
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சோர்வுறவில்லை
ஐந்து முதல் நீ ஆடி வந்தாலும்
ஓக்சிஜன் குறையவில்லை
சொன்னால் கேள் ஒஸ்கர் தூரமில்லை (உலக)(Come)

உடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரம்
உள்ளத்தின் கணக்கில் நூரவதாரம்
முகங்களை உரித்து மனங்களை படித்து
பேரும் கொண்டே அறிவு கொண்டான்
விஞ்ஞானி ப்ரொய்லியும் புரிந்து கொண்டாய்
விதைகளுக்குள்ளே விருட்சங்கள் தூங்கும்
உன் ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும்
நெருப்பினில் கிடந்து நிலங்களில் சிறந்து
நீயெனும் நிலையடைந்தாய்
இப்போது நிருபணம் ஆகிவிட்டாய் (உலக)


Wednesday, June 4, 2008

இதோ இதோ என் என் நெஞ்சில் / itho itho en nenjil ore raagam

படம் : வட்டத்துக்குள் சதுரம்

இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே
ஒரே ராகம்
கொடி நீ மலர் நான்
கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம்
துணை நீ (இதோ)

ஓடுது ரயில் பாரு மனம் போலவே
பாடுது குயில் அங்கு தினம் போலவே
மாமரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பறந்தோடுது
பார்ப்பது எல்லாம் பரவசமாக
புதுமைகள் காண்போம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீ தான் என் சொந்தமே(இதோ)

தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒளியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருயாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிக்கொரு கிளை போல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே (இதோ)

ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தொழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொல்லும் வழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே (இதோ)

ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அனுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே (இதோ)