இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே
கண்ணை மூடி உன்னைக் கண்ட
அப்பவே அப்பவே
கை வளையல் ஓசை கேட்ட
அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட
அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன்
அப்பவே அப்பவே (இப்பவே)
வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக்கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது
முள்ளை காலில் ஏற்றி கொண்டால் ரத்தம் மட்டும்தான்
உன்னை நெஞ்சில் ஏற்றி கொண்டேன் நித்தம் யுத்தம் தான்
சொல்லி தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட
மின்னல் கண்ட பாலை போல உன்னால் நானும் பூத்தாட
உன்னை கண்டேன் என்னை காணோம்
என்னை காண உன்னை நானும் (இப்பவே)
எந்தன் வாழ்வில் வந்ததிங்கு நல்ல திருப்பம்
இனி உந்தன் கையை பற்றி கொண்டே செல்ல விருப்பம்
நெஞ்சனையில் என்றும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்
உன்னை காண நானும் வந்தால்
சாலை எல்லாம் பூஞ்சோலை
உன்னை நீங்கி போகும் நேரம்
சோலை கூட தார் பாலை
மண்ணுக்குள்ளே வேரை போல
நேஞ்சுக்குள்ளே நீ தான் நீ தான் (இப்பவே)
This blog for publishing my passion that is writing . எனது எழுத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு இடம்..
Saturday, November 8, 2008
Ippave Ippave
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment