Wednesday, March 7, 2018

International Woman's Day



தினமும் நமக்கு பெண்கள் தினம் தான். ஆனாலும் எதற்காக இப்படி தனியாக ஒரு நாள்? யோசிச்சுப் பார்த்தேன். இது தான் பட்டுனு தோணுச்சு.

பெண்ணான நாம் தினமும் ஆண் போல வேலைகளைப் பார்க்கிறோம். அதனால பாடி கண்டிஷன் ரொம்ப வீக்காயிருச்சு. இன்னிக்கு பெண்கள் தினம்னு ஒன்னு கொண்டாடினாலாவது, அட நாம பொண்ணாச்சேன்னு ஞாபகம் வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்னுதான் இந்த தினம்.

இன்னிக்கும் ரெஸ்ட் கிடைக்காதவங்க, மே 1 க்கு வேய்ட் பண்ணுங்க. தொழிலாளர் தினமாச்சும் உங்களுக்கு நல்லதா விடியட்டும்..

அனைவருக்கும் எனது இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்.  

கனவாய் நனவாய் -- கவிதை






நனவிலே நீ வந்தாய்
கனவென நான் இருந்தேன்
காதலை நீ தந்தாய்
கானலென நினைத்திருந்தேன்
ராகமாய் நீ இருந்தாய்
செவிக் கதவை அடைத்திருந்தேன்
உயிரன்பு நீ தந்தாய்
உணராமல் மரித்திருந்தேன்
வருவாய் எனை உணர்வாய்
தேவாமிர்தம் தருவாய்
நனவிலும் உன் கனவை தேடும்
இவள் தேவனின் தேன்மலர்…..

Thursday, December 4, 2008

ஓ சாந்தி சாந்தி (vaaranam ayiram)

நீயின்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடு வானம் சிவந்து போகும்
தொலை தூரம் தொலைந்து போகும்
கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே
இனி உன்னை பிரிய மாட்டேன்
துளி தூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்க தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் இமை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
ஓ………………….

நீயின்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உனை காணும் நேரம் வருமா..வருமா
என் கண்கள் மோட்சம் பெறுமா

விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
தினம் நானும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
எனை வந்து உரசும் காற்றே
அலையோடு கரைந்து நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் இமை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் இமை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
லாயி லாயி லாயி

Saturday, November 8, 2008

Ippave Ippave

இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே
கண்ணை மூடி உன்னைக் கண்ட
அப்பவே அப்பவே
கை வளையல் ஓசை கேட்ட
அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட
அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன்
அப்பவே அப்பவே (இப்பவே)


வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக்கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது
முள்ளை காலில் ஏற்றி கொண்டால் ரத்தம் மட்டும்தான்
உன்னை நெஞ்சில் ஏற்றி கொண்டேன் நித்தம் யுத்தம் தான்
சொல்லி தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட
மின்னல் கண்ட பாலை போல உன்னால் நானும் பூத்தாட
உன்னை கண்டேன் என்னை காணோம்
என்னை காண உன்னை நானும் (இப்பவே)

எந்தன் வாழ்வில் வந்ததிங்கு நல்ல திருப்பம்
இனி உந்தன் கையை பற்றி கொண்டே செல்ல விருப்பம்
நெஞ்சனையில் என்றும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்
உன்னை காண நானும் வந்தால்
சாலை எல்லாம் பூஞ்சோலை
உன்னை நீங்கி போகும் நேரம்
சோலை கூட தார் பாலை
மண்ணுக்குள்ளே வேரை போல
நேஞ்சுக்குள்ளே நீ தான் நீ தான் (இப்பவே)