This blog for publishing my passion that is writing . எனது எழுத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு இடம்..
Thursday, March 15, 2018
நான் பாடும் மௌனராகம்
இந்தப் பாட்ட நான் இதோட ஐம்பது தடவ கேட்டுட்டேன். ஏன்????
தெரியலை.. சோகமா இருக்கறப்ப சோக பாடலை கேட்கக் கூடாது சொல்லுவாங்க. அது இன்னும் டிப்ரஷன குடுக்குமாம். ஆனா இந்தப் பாட்டு கேட்கும் போது எனக்கு ஒரு பீஸ்புல்னஸ். வாவ் பீலீங். சின்ன வயசுல இருந்து கேட்ட பாட்டுத்தான், ஆனா இப்போ இன்னும் மனசுக்கு நெருங்கிருச்சி. அதுவும் இந்த வரி...
கண்கள் என்னும் சோலையில்
காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு தான்
சாபம் என்று கண்டேன்
முழு பாடல் வரிகளும் கீழே குடுத்துருக்கேன். ராஜானா ராஜாதான் :)
நான் பாடும் மௌன ராகம்…. என் காதல் ராணி இன்னும்…..
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கும் பிடிக்கும் நிஸ்...
ReplyDelete