









This blog for publishing my passion that is writing . எனது எழுத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு இடம்..
படம் : வட்டத்துக்குள் சதுரம்
இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே
ஒரே ராகம்
கொடி நீ மலர் நான்
கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம்
துணை நீ (இதோ)
ஓடுது ரயில் பாரு மனம் போலவே
பாடுது குயில் அங்கு தினம் போலவே
மாமரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பறந்தோடுது
பார்ப்பது எல்லாம் பரவசமாக
புதுமைகள் காண்போம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீ தான் என் சொந்தமே(இதோ)
தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒளியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருயாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிக்கொரு கிளை போல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே (இதோ)
ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தொழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொல்லும் வழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே (இதோ)
ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அனுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே (இதோ)
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா(பூ)
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே (பூ)
பூங்காற்றிலே சிறு பூங்கொடிபோல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே என்னை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே (பூ)
அம்மாவென்று வரும் கன்று குட்டி
அது தாய்மையை கொண்டாடுது
குக்கூவென்று வரும் சின்ன குயில்
தன் குழந்தைக்கு சோறுட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீ இன்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே (பூ)